காதலை கருவாக்க
கல்யாணம் துணையாகும் என்ற கனா
காமம் கடக்க முயல்கையில்
கரைந்து போனது
காதலுக்காய் கையருப்பது போய்
கருவருப்பில் வந்து நின்றது
போர்வைக்குள் புரியாமல் புதைந்ததற்கு
மரணம் மட்டும் பிறக்காதவற்கு
இருவர் செய்த தவறுக்கு
தண்டனை மட்டும் மூன்றாமவற்கு
காதலை விட கருவை
கரைப்பது கடினமாக இல்லை
அனாதைகளாய் அலைக்களிப்பதை விட
குழந்தையாக்கி குடித்தனம் செய்வதை விட
கரைப்பது கடினமாக இல்லை
மூச்சு விட தொடங்காத பிஞ்சை
மூச்சை அடக்க முயல்வதேனோ?
சத்தம் கூட செய்யாத சதையை
சடலமாக்குதல் சாதனை தானோ?
அழுவதற்கு முன்னரே அழிக்கப்பட்ட அணுக்கள்
சிரிப்பதற்கு முன்னரே சிதைக்கப்பட்ட சிசுக்கள்
பிறப்பதற்கு முன்னரே பிறப்புரிமை இழந்த பிறவிகள்
செய்த பிழை என்ன?
மலர் வைத்து மகிழ வேண்டிய மகளை
மரணத்தில் வைக்க மனமெப்படி வந்ததோ?
அவளின் அமைதியான அலறல்கள்
தாயின் காதடைக்கவில்லையா?
கருவுக்குள் கல்லறை வைத்த
கயவர்கள் பிறந்த மண்ணில்
புதைக்க இடமில்லாமல் தான்
மடியில் புதைந்து கொண்டனரோ?
No comments:
Post a Comment